ஸ்ரீ சாது ஓம் எழுதிய ஸ்ரீ ரமணரின் போதனைகளின் அழகான சுருக்கத்தை இங்கே வழங்குகிறோம்.
மைக்கேல் ஜேம்ஸுடன் (ஆங்கிலத்தில்) ஒரு வீடியோ பதிவையும் வழங்குகிறோம்; அதில் அவர் இந்த சுருக்கத்தை பூர்த்தி செய்து விரிவுபடுத்துகிறார். மைக்கேல் சாது ஓம் உடன் பல ஆண்டுகள் வாழ்ந்தவர், ஸ்ரீ ரமணரின் அனைத்து அசல் படைப்புகளையும் முழுமையாகக் கற்றுக்கொண்டார். இந்த வீடியோவில், மைக்கேல் தர்க்கம் மற்றும் ஆன்ம விசாரணையின் நுட்பத்தை விளக்குகிறார். இது பக்தர்கள் இந்த நேரடி பாதையில் செல்ல உதவும்.
1. குறிக்கோள்
பரிபூரண சுகத்தை யடைவதையே பகவான் ஸ்ரீ ரமணர் மனித சமூகத்தின் குறிக்கோளாகக் காட்டி கொடுக்கின்றனர். சுகத்தை விரும்பாத ஜீவர் யாரு மில்லை. சகல ஜீவர்களும் தத்தம் சகலவித முயற்சிகளாலும் நாடுவது சுகத்தையே யல்லவா? ஆகையால், ஸ்ரீ பகவானது குறிக்கோளை மறுப்போர் யாருமிலர். இக் காரணத்தாலேயே ஸ்ரீ ரமணோபதேசங்கள் யாதொரு தனிப்பட்ட மதக் கொள்கையு மாகாமல், சகல உயிர்கட்கும் புகலளிக்கும் பொதுப் பெரு நெறியாக விளங்குகின்றது. அதனால்தான் உலகின் எந் நாட்டினரும் எம் மதத் தினரும் ஸ்ரீ ரமணோதேசங்களை மிக்க விருப்பமுடன் ஏற்றுப் பின்பற்றுகின்றனர்.
சுகம் என்பது யாது? இதைச் சரியாக அறிந்து கொள்ளாததால்தான் மக்கள் சுகத்திற்காகப் பற்பல துறைகளிலும் தம் முயற்சியைச் செலுத்தி வருகின்றனர். சுகம் என்பது ஆன்மாவே. ஆன்மாவின் இயல்பே சுகம். உண்மையில் நாம் ஆன்மாவே. நம் இயல்பு சுகமே. ஆயினும் தாம் ஆன்மாவே என்றறியாமல் தம்மை உடலாகக் கருதியிருப்பதால்தான் மக்கள் சுகத்தை யிழந்தவர்களாகவும் துன்புறுபவர்களாகவும் அவசியமின்றிக் கவலைப்படுகிறார்கள். இழந்ததாகத் தோன்றும் நம் சுகத்தை மீண்டும் அடைவதற்கு, மறந்ததாகத் தோன்றும் நம் உண்மை யியல்பை - ஆன்மாவை - அறிவதொன்றே போதும்.
‘நாம் சுகமடைய முயல்வது சுயநல மல்லவா?’ என்று சிலர் கேட்பதுண்டு. ‘சுயம்’ என்ற பதத்தின் சரியான பொருளைத் தெரிந்து கொள்ளாததால்தான் இக் கேள்வி நன்மக்களிடமும் எழுகின்றது. ‘சுயம்’ என்பது ஆன்மாவே. தன்னை அகண்ட ஆன்மா என்றறியாமல், தன்னைக் குறுக்கி நோக்கி, ‘இவ்வுடலே நான்’ என்று கருதுவதால்தான் ‘சுயநலம்’ என்ற சொல் ஓர் கீழ்மைக் குணத்தைக் குறிக்கும் சொல்லாக நம்மிடையே வழங்கி வருகின்றது. ‘சகல உயிர்களிலும் ஏகமாய் ஒத்து விளங்கும் ஆன்மாவே நான்’ என்றறியும் ஆன்ம ஞானி ஒருவனின் அனுபவத்தில் ‘சுய நலம்’ என்பது சகல உயிர்களின் நலமுமே யாகிற தல்லவா? ஆன்ம ஞானம் உண்டானால்தான் சகல உயிர்களின் உண்மையும் தானே என்பது விளங்கும். இவ்வாறு தன்னை ஆன்மாவாக உணர்ந்தால் தான் அனைத்துயிர்க்கும் அனைத் துலகிற்கும் உண்மையான நன்மை யுண்டாக்க முடியும். ‘தன்னைப் போன்று பிறரை நினை’ என்று வாய்ப் பேச்சால் மட்டும் பிரசாரம் செய்வதால் உலக உயிர்களிடம் உண்மையான அன்பு நமக்கு உதிக்காது. ஆன்ம ஞானத்தால் உயிர்கள் அனைத்தையும் தன்மையொரு மையாய் அனுபவித் துணரும் பொழுதுதான் சகல உயிர்களிடத்தும் நமக்கு அனன்னிய அன்பு சித்திக்கும். இவ் வான்ம சித்தியே உலகில் சாந்தி, சமாதானம், சுகம் இவை நின்று நிலவ ஆணிவேர். ஆகையால் அகங்கார தோஷத்தை நசிப்பிக்கும் ஆன்ம விசார நெறியே தற்போது உலகின் முக்கிய தேவையாகும். உண்மையான ஆன்ம ஞானியே உலகிற்கு உண்மையான உபகாரியுமாவான்! தன்னை அறிந்த மெய்ஞ்ஞானி ஒருவரின் இருப்பே இவ்வுலகத்திற்குப் போதியதான பேருபகாரமு மாகும். எனவே உலகமெலாம் சுகமடையவேண்டும் என்றால், மனித சமூகத்தின் சரியான குறிக்கோள் ஆன்மாவை யறிவதாகவே அமைய வேண்டும் என்பது விளங்குகின்ற தல்லவா?
ஆன்ம ஞானத்தால் மட்டுமே உண்மையான பூரணமான சுகத்தை மக்கள் அடைய முடியும். இதை விடுத்துப் பஞ்சேந்திரியங்கள் வழியே உலகப் பொருள்களை அனுபவித்துச் சுகமடைய முயல்வது சரியானதல்ல. ஏனெனில், சுகம் அப் பொருள்களிலிருந்து வருவதில்லை. இவ்வற்ப சுகானுபவங்களுங்கூட அனுபவிக்கப்படும் போது, மனம் தன் விருத்திக ளடங்கி ஆன்மாவில் மூழ்குவதால் தான் அனுபவிக்கப்படுகின்றன. நாம் விரும்பிய பொருள்கள் கிடைக்கும் போதும், நாம் வெறுத்த பொருள்களுக்குக் கேடுண்டாகும் போதும் மனம் உண்முகப்பட்டு ஆன்மாவில் மூழ்கி ஒன்றுவதால் ஆன்ம சுகத்தையே அனுபவிக்கின்றது. இந்த உண்மையை அறியாததால் மக்கள் பொருள்களிலிருந்து தமக்குச் சுகம் கிடைப்பதாகத் தவறாகக் கருதி, அந்தப் பொருள்களைத் தேடுவதையே தம் வாழ்வின் குறிக்கோளாக்கி நாள் முழுவதும் அதற்காகவே பாடுபடுகின்றனர். இதுவே அறியாமை அல்லது மாயை.
உலகப் பொருள்களைத் தேடிக் குவித்துப் பஞ்சேந்திரியங்களின் மூலம் அவற்றை அனுபவித்தடையும் சுகம் மிக அற்பமும் அநித்தியமு மாகின்ற தல்லவா? இவ்வாறு அற்ப சுகானுபவியாக நாம் ஆகாமல், பரிபூரண சுகானுபவியாவதே நமக்கு ஸ்ரீ ரமண பகவான் காட்டித் தரும் குறிக்கோள்.
2. வழி
இக் குறிக்கோளை அடைய ஸ்ரீ பகவான் வகுத்தளித்துள்ள வழிகள் இரண்டு. (1) தன்னை ‘நான் யார்?’ என்று விசாரித்தறியும் ஆன்ம விசாரம்.
(2) இறைவனிடம் தன்னை முழுவதும் ஒப்புவித்துவிடும் ஆன்ம சமர்ப்பணம். முந்தியது அறிவு நெறி (ஞான மார்க்கம்) பிந்தியது அன்பு நெறி (பக்தி மார்க்கம்).
ஆன்மவிசாரம்: நாம் எதை யறிய விரும்புகிறோமோ அதை நாடுகிறோம். அவ்வாறே தன்னை யறிய விரும்பினால் தன்னையே நாட வேண்டும்.
ஆனால் உலகிற் காணப்படும் ஆராய்ச்சிகள் முழுவதும் தன்னை விட்டுவிட்டு முன்னிலைப்-படர்க்கைப் பொருள்க ளாகிய உலகையும் கடவுளையும் ஆராய்வதே யாகு மல்லவா? உலகம் கடவுள் இவைகளை ஆராயும் அறிவாகிய மனிதன் தன்னை யாரென்று சரியாக இன்னும் அறியவில்லை. ‘நான் மனிதன்’ என்கிறோம். இது அறியாமையே தவிர, தன்மையின் உண்மையான அறிவல்ல. ஏனெனில் நமது உடமை யாகிய உடம்பையே நாம் என்று தவறாக எண்ணுவதால்தான் ‘நான் மனிதன்’ என்கிறோம். உடையவ னாகிய நான் யாரென்று உடம்பினின்றும் நம்மைப் பகுத்து அறியும் அறிவே சரியான பகுத்தறிவு. தேகமே நானென் றுணரும் அறிவு (அகங்காரம்) போலித் தன்மை யுணர்வே. அகண்ட ஆன்மாவாகத் தன்னை யறிவதே மெய்யான தன்மை யறிவு அல்லது ஆன்ம ஞானம்.
உறக்கத்திலிருந்து உணர்வு எழும்போது ‘நான் இவ்வுடல்’ என்ற வடிவில் நம்மை உணர்கிறோம். ஆனால் உறக்கத்தில் உடல் உலக உணர்வுகள் இல்லை. ‘நான் இருக்கிறேன்’ என்ற சுத்தவுணர்வு உறக்கத்தில் உள்ளது. விழிப்பில் இத் தன்னுணர்வு ‘நான் உடலாக இருக்கிறேன்’; ‘நான் மனிதனாக இருக்கிறேன்’; ‘நான் இன்னாராக இருக்கிறேன்’ என்றவாறு ஓர் உபாதியைச் சேர்த்துக்கொண்டு எழுகின்றது. இதுவே அகந்தை, ஜீவபோதம்; இதுவே பந்தம். இதுவே முதல் எண்ணம். இந்த முதல் எண்ணமாகிய மனிதனுக்கே முன்னிலை-படர்க்கைகளின் உணர்வாகிய பிற எண்ணங்கள் உண்டாகின்றன. முன்னிலைப்-படர்க்கைகளை நாடநாட மேலும் எண்ணங்கள் விருத்தியாகிக் கொண்டே போகும். தன்மை யுணர்வாகிய ‘நான் இன்னாராக இருக்கிறேன்’ என்ற அகந்தை வடிவத்தை இதன் இருப்பு எத்தகையது என்று நாடவேண்டும்.
‘முன்னிலைப் படர்க்கைகளாகிய பிற எண்ணங்கள் எழுந்தால் அவற்றைப் பூர்த்தி பண்ணுவதற்கு எத்தனிக்காமல், “அவை யாருக் குண்டாயின?” என்று விசாரிக்க வேண்டும். எத்தனை எண்ணங்க ளெழினு மென்ன? எண்ணங்களின் மேற் செல்லும் கவனத்தைத் தன் மீதே திருப்ப வேண்டும். திருப்புவது எப்படி யெனின், ஒவ்வோ ரெண்ணமுங் கிளம்பும் போதே ஜாக்கிரதையாக, “இது யாருக் குண்டாயிற்று?” என்று விசாரித்தால், “எனக்”கென்று தோன்றும். உடனே “நானார்?” என்று விசாரித்தால் மனம் - நம் கவனசக்தி எண்ணங்களை விட்டுத் தன் பிறப் பிடத்திற்குத் (ஆன்மாவிற்குத்) திரும்பிவிடும். அதனால் எழுந்த பிறஎண்ணங்களும் கவனிப்பா ரற்றதால் அடங்கி விடும். இப்படிப் பழகப்பழக, மனத்திற்குத் தன் பிறப்பிடத்திற் றங்கி நிற்கும் சக்தி அதிகரிக்கின்றது. “நான் யார்?” என்ற ஆராய்ச்சி யினாலேயே மனம் அடங்கும். மன மடங்குவதற்கு விசாரணையைத் தவிர வேறு தகுந்த உபாயங்க ளில்லை. பிராணாயாமம், மூர்த்தித் தியானம், மந்திர ஜபம் முதலிய மற்ற உபாயங்களினால் அடக்கினால், மனம் அடங்கினாற் போலிருந்து மறுபடியும் கிளம்பி விடும். மனத்தின்கண் எதுவரையில் விஷய வாசனைக ளிருக்கின்றனவோ அது வரையில் “நான் யார்?” என்னும் விசாரணையும் வேண்டும். சொரூபத் தியானம் கிளம்பக் கிளம்ப வாசனைகள் யாவு மழிந்துவிடும். ஒருவன் தான் சொரூபத்தை அடையும் வரையில் நிரந்தர சொரூப ஸ்மரணையைக் கைப் பற்றுவானாயின் அதுவொன்றே போதும். “நான், நான்” என்று கருதிக் கொண்டிருந்தாலுங் கூட அவ்விடத்தில் கொண்டு போய் விட்டுவிடும். சதாகாலமும் மனத்தை (நாட்டத்தை) ஆன்மாவில் (தன்மையுணர்வின் மேல்) வைத்திருப்பதற்குத் தான் “ஆத்மவிசாரம்” என்று பெயர். பந்தத்திலிருக்கும் தான் யார் என்று விசாரித்து, தன் யதார்த்த சொரூபத்தைத் தெரிந்து கொள்வதே முக்தி’ என்கிறார் ஸ்ரீ பகவான்.
‘நான்’ என்னும் தன்மையுணர்வு எது என்று நாடுவதற்கு எழுந்த அகம் விருத்தி மற்ற நினைவுகளை யெல்லாம் அழித்து, பிணஞ்சுடு தடிபோல் முடிவில் தானும் அழியும். அதாவது, எல்லா நினைவுகளுக்கும் மூல எண்ண வடிவமான ‘நான் இன்னாராக இருக்கிறேன்’ என்ற கலப்புணர்வில் உள்ள ‘இன்னாராக’ என்ற உபாதியுணர்வு மட்டும் (அது பொய்யிருப்பே யாகையால்) கழன்று போய், நான் இருக்கிறேன் என்ற தன்னிருப்பின் மெய்யுணர்வான ஆன்மாவே மிஞ்சி விளங்கும்.
இவ்வாறு ஜீவோபாதியினின்றும் விடுபட்டு நாம் சுயமே பிரகாசிப்பதே ஜீவன்முக்தி, மோக்ஷம், பரநிர்வாணம், பரம பதம், கடவுள் நிலை என்றெல்லாம் பற்பல மதங்களிலும் கோஷிக்கப்படுகின்றது. ஜீவபோத ரூப அகந்தை அழியும் இந்நிலையே மரணமற்ற அமரநிலை. அகந்தையை வேரறுக்கும் இந் நிகழ்ச்சியே பக்தி மார்க்கமாகிய ஆன்ம சமர்ப்பணத்திலும் எவ்வாறு நிகழ்கின்றதென்று பார்ப்போம்.
ஆன்ம சமர்ப்பணம்: ஆன்ம சமர்ப்பணம் என்பது அகங்காரத்தை ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதே என்று தெரிந்துகொள்ள வேண்டும். உண்மையில் ஆன்ம விசாரமும் ஆன்ம சமர்ப்பணமும் (அகந்தையை நசிப்பிப்பதாகிய முடிவு நிலையிலும் சரி, செய் முறையிலும் சரி) இரண்டல்ல; ஒன்றே! கடவுளை நம்புவோர்க்குப் பக்தி மார்க்கமாகிய ஆன்ம சமர்ப்பணம். இந்த ‘நான்’ என்ற ஜீவனும் உலகமும் உண்மையில் கடவுளுக்கே உடைமையானவையா யிருக்க, தேகத்தை ‘நான்-எனது’ என்று உரிமை பாராட்டித் திரிவது ஆண்டவனுடைய பொருளை அபகரித்த அபசாரச் செயலே யாகும். தேகாபிமானத்தை ஆண்டவனுக்குச் சமர்ப்பித்து விட்டால் நானற்ற நிலை சித்திக்கும். அகங்கார மமகார மற்ற இந்நிலையே ஆன்ம நிலை.
மேலெழுந்த வாரியாக நோக்குவார்க்கு, ‘ஆன்ம விசாரியோ தன்னை நாடுகிறான்; பக்தனோகடவுளை நாடுகிறானே’ என்றவாறு செய்முறையில் ஆன்ம விசாரத்திற்கும் ஆன்ம சமர்ப்பணத்திற்கும் ஓர் வேற்றுமை இருப்பது போலக் காணப்படினும், உண்மையாகவே சாதனையில் ஈடுபடும் சாதகன் ஒருவனுக்கு, அகந்தை அழிந்து ஆன்மாவாக நிலைபெறுவதாகிய முடிவு நிலையில் மட்டுமன்றிச் செய்முறையிலும் இரண்டும் ஒன்றே யாவது தெற்றென விளங்கும். எவ்வாறெனின், தன்னைக் கடவுளுக்குச் சமர்ப்பிக்கும் சாதனையைத் தொடங்கும் பக்தன் பிறகு தேகத்தை ‘நான்’ என்றோ ‘எனது’ என்றோ மீண்டும் பற்றிக்கொள்ளும் அபிமானத்தை ஏற்கவே கூடாது. கடவுளுக்குக் கொடுத்ததை மீண்டும் எடுத்துக் கொள்ளும் தத்தாபகாரச் செயலே இது. ஆகையால், மீண்டும் அவைகளைஅபகரிக்காமல் இருக்கமுயல்வதே சரணாகதியின் சரியான சாதனை முறை. அப்போது அவன் என்ன செய்கிறான்? ‘தேகமே நான்’ என்னும் போலித் தன்மையுணர்வு கிளம்பி விடாம லிருப்பதற்காக, அத் தன்மை யெழுச்சியின் மேல் சர்வ ஜாக்கிரதையான கவனத்துடன் இருக்க முயல்கிறா னல்லவா? ஆன்மவிசாரி கவனம் செலுத்தும் தன்னாட்டமே இவ்வாறு உண்மையான பக்த னொருவனிடமும் நிகழ்கின்றது!
மேலும் ஒருவன் தன்னைக் கடவுளுக்குச் சமர்ப்பிக்க விரும்பினால் சமர்ப்பிக்கப்படவேண்டிய பொருளாகிய ‘நான்’ என்பது யாது என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில், இந்த ‘நான்’ என்று அவனால் உணரப்படுவது எதுவென்று சரியாக அறிந்து கொள்ளப் படாவிடில், அவன் அதை எப்படிச் சமர்ப்பிக்க முடியும்?
உதாரணமாக, தோல்வியுற்ற போர்வீர னொருவனைக் கைதுசெய்த பின், ‘உன்னிடமுள்ள ஆயுதத்தைக் கீழே போடு’ என்று கட்டளையிடும் போது, அவன் ‘ஆயுதம்’ என்று தமிழிற் குறிப்பிடப்படுவது எது வென்றறியாத ஓர் பிற மொழியினனாயின், ஆயுதத்திற்குப் பதில் ஒரு காகிதத்தையே கீழே போடுவானல்லவா? அது போலவே, பக்திமார்க்கத்தில் ஈடுபட்டு ஆன்மசமர்ப்பணம் செய்ய விரும்பும் சாதகர் பலரிடமும் இத்தகைய பிழையே காணப்படுகின்றது! அவர்கள் எல்லோரும் தம்மைக் கடவுளுக்குக் கொடுத்துவிட வேண்டும் என் றறிந்திருந்தாலுங் கூட, தான் யார் என்றும், தன்னை அர்ப்பணிப்பது என்றால் என்ன, எப்படி, என்றும் அறியாதவர்களாகவே யிருப்பதால், சம்பூரண சரணாகதி செய்வ தெப்படி என் றறியாது திகைக்கின்றனர். ‘நான்’ என்பது என்ன என்று சரியாக விசாரித்தறியாதோ ராகையால், அவர்கள் ‘எனது’ என்ற வடிவில் உணரப்படுகிற உடைமைப் பொருள்களை மட்டும் கடவுளுக்குச் சமர்ப்பிக்கின்றனர்.
அதாவது, உடையவனாகிய தன் இயல்பு யாது என்று அறியாததால் உடைமையை மட்டுமே அர்ப்பணிக்கின்றனர். ஆகையால், தன் சரணாகதியைச் சம்பூர்ணமாக்க வேண்டு மாயின், அவர்கள் தன்னை யார் என்று விசாரித் தறிய, கொஞ்சங் கொஞ்சமாகவாவது முற்பட வேண்டும். பிறகு தான் தன்னைச் சம்பூரணமாகச் சமர்ப்பித்து விட முடியும்.
சமர்ப்பிக்கப்பட வேண்டிய ‘நான்’ என்னும் அகந்தையோ, நாட்டம் தன்மீது செலுத்தப்படுமாயின் பதுங்கி உருமறையுஞ் சுபாவ முடைய தாகையால், ஒருவன் சரியானபடி தன்னை விசாரிப்பானாயின், அவன் சமர்ப்பிக்க விரும்பும் ‘நான்’ என்னும் அகந்தை இருப்பற் றொழிவதால், இத் தன் னிழப்பால், ஆன்ம சமர்ப்பணமாகிய சரணாகதியும் அவனிடம் சம்பூர்ணமாகி விடுகின்றது.
இவ்வாறு முன்னிலைப்-படர்க்கைகளை நாடுவதை விட்டு, மனம் தன் மூலத்தை நாடும் விசாரமே சரியான ஆன்ம சமர்ப்பணமும் ஆகின்றது!
ஆன்ம சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்றுமிடங் கொடாமல் ஆத்ம நிஷ்டாபரனாய் இருப்பதே தன்னை ஈசனுக் களிப்ப தாகும் என்பது ஸ்ரீ ரமண வாக்கு. கடவுளை பக்தன் வெளியில் தேடுவதும் முன்னிலை+ நாட்டமே. தன்மையின் உண்மை யாய்க் கடவுள் விளங்குவதால் தன்மையை நாடுவதே சரியான கடவுள் நாட்டமான பக்திமார்க்கமு மாகும்.
En este artículo presentamos un excelente resumen de las enseñanzas de Sri Rámana inicialmente recopiladas por Sadhu Om, discípulo directo de Sri Bhagaván y colaborador cercano de Sri Muruganar, quien a su vez fuera el discípulo más destacado de Bhagaván. También incluimos un video con Michael James que complementa y expande este resumen. Michael pasó muchos años en compañía de Sri Sadhu Om y realizó un estudio completo de todos los trabajos originales de Sri Rámana. En el video, Michael explica la lógica y la técnica de la autoinvestigación, de manera que los devotos puedan iniciarse fácilmente en este camino, que es el camino directo.
1. La Meta
Bhagaván Sri Rámana ha revelado que la única meta que toda la humanidad tiene es el logro la felicidad perfecta (paripurna sukham). No existe nadie quien no desee ser feliz. A través de todos sus esfuerzos, ¿no es la felicidad lo que todos los seres vivos (jivas) desean alcanzar? De modo que no hay nadie quien no desee alcanzar esa meta señalada por Sri Rámana. Por esta razón las enseñanzas de Sri Rámana no pertenecen a una religión en particular, sino que, por el contrario, brillan como un camino común y abierto que ofrece refugio a todos los seres vivos. Es por esto por lo que la gente de cualquier país en el mundo acepta las enseñanzas de Sri Rámana y las sigue con gran amor.
¿Qué es la felicidad? Debido a que la respuesta correcta a esta pregunta no la conocen, la gente enfoca sus esfuerzos en muchas direcciones diferentes, buscando la felicidad. La felicidad no es más nada sino el yo (el atman). La naturaleza propia del yo es la felicidad y, como en realidad no somos más nada sino ese yo, nuestra naturaleza es la felicidad misma. Sin embargo, la gente sufre innecesariamente como si la hubiera perdido, identificándose con el cuerpo sin saber que realmente son el yo. Para recuperar esa felicidad aparentemente perdida es suficiente con conocer nuestro yo, nuestra naturaleza real, la que parece haberse olvidado.
Alguna gente se pregunta si no es egoísmo tratar de alcanzar la felicidad para uno mismo. Como el significado correcto de la frase “para mí mismo”, la cual se refiere a “yo” no se conoce, esta pregunta surge hasta en la mente de la gente buena. La palabra cotidiana “yo” (swayam) en “yo mismo” simplemente significa el yo (el atman). Es solo porque no sabemos que nuestro yo es un yo ilimitado e indivisible y, porque nos percibimos a través del cristal de que “este yo es solamente este cuerpo” que la palabra egoísmo es considerada como una cualidad baja en el individuo. Pero ¿no es en la experiencia de un atma jnani, uno que conoce que “yo soy realmente el yo que brilla por igual en todos los seres vivos”, que la palabra egoísmo o interés propio (swaya nalam, literalmente “beneficio propio”) involucra únicamente el interés o beneficio de todos los seres vivos? Solamente cuando el autoconocimiento (atma jnana) surge, es que se conoce la verdad de que el yo es la única realidad de todos los seres vivientes. Solo cuando reconocemos a nuestro yo como “el yo” es que podemos hacer un bien real a todos los seres vivos en el mundo. No Podemos experimentar verdadero amor hacia todos los seres simplemente predicando “amarás a tu prójimo como a ti mismo”. Es solo cuando a través del autoconocimiento experimentamos que todos los seres son “yo”, la primera persona en singular, que podremos amar a los demás exactamente como a nosotros mismos (ananya priyam). Esta realización (atma siddhi) es la raíz principal que permite que la paz, el amor, y la felicidad florezcan en el mundo. Por lo tanto, la autoinvestigación, la medicina que destruye la maldad del ego, es la principal e inmediata necesidad en el mundo. ¡Solo el verdadero atman jnani puede hacer un bien real al mundo! La simple existencia de un jnani, uno que se conoce a sí mismo, es suficiente para asegurar el bienestar en todo el planeta. Entonces, ¿no queda claro que, si el mundo desea adquirir la felicidad, la meta correcta de toda la humanidad debe ser conocer el yo?
Solo a través del autoconocimiento puede la gente alcanzar la verdadera y perfecta felicidad. Es errado ignorar este hecho y tratar de alcanzar la felicidad a través del disfrute de objetos materiales por los cinco sentidos, pues la felicidad no proviene de ninguno de esos objetos. Hasta en los momentos en que esos objetos nos puedan causar un pequeño placer, ese placer realmente se debe a que la mente se ha sumergido en el yo y su actividad (actividad mental o vrittis) ha sido momentáneamente tranquilizada. Cada vez que adquirimos aquellas cosas que nos gusta, o cuando algo malo les ocurre a aquellas que no nos gusta, la mente se introvierte, adentrándose en el yo, experimentando su felicidad. Como la gente no conoce esta verdad, piensa equivocadamente que la felicidad se obtiene a partir de los objetos materiales y trabaja día y noche en la búsqueda de esos objetos, tomándolos como la única meta en la vida. Esto, en efecto, es ignorancia, llamada también maya.
La felicidad alcanzada a través de la búsqueda y adquisición de objetos materiales y su disfrute a través de los cinco sentidos, es trivial y transitoria, ¿verdad? La meta revelada por Sri Rámana Bhagaván es la de evitar que seamos uno de esos que solamente disfruta esa felicidad trivial y nos convirtamos en uno que disfrute la felicidad perfecta.
2. El Camino
Para alcanzar la perfecta felicidad, Sri Bhagaván ha delineado dos caminos a seguir. El primer camino es el de la autoinvestigación(atma vichara), que se refiere a conocerse a uno mismo (nuestra real naturaleza) a través de la investigación de “¿Quién Soy Yo?”. El segundo camino es el de la renunciación o autoentrega (atma samarpanam), que es la devolución (del ego) completa a Dios. El primero es el camino del conocimiento (jnana marga) y el segundo es el camino del amor o la devoción (bhakti marga).
La autoinvestigación. Cuando deseamos conocer algo en particular nos enfocamos en ese algo. Así mismo, si deseamos conocer el yo debemos enfocarnos en él, en la primera persona, en la conciencia del yo”.
Sin embargo, ¿no están todas las investigaciones que vemos en el mundo enfocadas solamente en conocer al mundo y a Dios que son objetos de la segunda y la tercera persona, en vez de conocer al yo, que es la primera persona o sujeto? El ser humano, la entidad conocedora, la que trata de conocer al mundo y a Dios, aún no se conoce correctamente a sí mismo. Decimos “soy un ser humano”, o “soy un hombre”, o “soy una mujer”. Identificarnos a nosotros mismos de esta manera no expresa un conocimiento correcto de nuestro yo, sino que indica ignorancia. ¿Cómo es esto? Sentimos que “yo soy un ser humano” solo porque de una manera equivocada pensamos que somos el cuerpo, lo que en realidad es una pertenencia nuestra. Conocer el yo a través de indagar “¿quién soy yo, el poseedor?”, y por lo tanto distinguir el yo del cuerpo físico es el único conocimiento discriminador. El creer “yo soy el cuerpo”, que en realidad es el ego o ahankara, es un conocimiento errado del yo. Conocer el yo solo como el yo ilimitado e indivisible (akhanda atman) es atma jnana o real autoconocimiento
Al momento en que nos despertamos en la mañana, nuestra conciencia se comienza a identificar con “yo soy el cuerpo”; sin embargo, mientras estamos dormidos esa identificación con el cuerpo y con el mundo no existe; solo existe la conciencia pura de “yo soy”. En el estado de vigilia esta conciencia pura emerge mezclada con el agregado (upadhi) “soy el cuerpo”; “soy un hombre”, “soy tal y tal cosa”. Este agregado es el ego (ahankara), es nuestro sentido de individualidad (jiva bodha). Este es el primer pensamiento que tenemos al despertar y representa un apego. Solo después de que este pensamiento, el de hombre o mujer, ha surgido, comienzan a surgir todos los otros pensamientos sobre las segundas y terceras personas. A medida que uno presta atención a estos otros pensamientos, más pensamientos surgirán. Entonces, si uno desea saber“¿quién soy yo”? o “¿cuál es la naturaleza verdadera, real y exacta de mi existencia?”, uno debe enfocarse en la forma del ego, la primera persona que siente “yo soy tal y cual” y, no en segundas o terceras personas.
Cuando surgen otros pensamientos (sobre segundas y terceras personas), uno debe preguntarse, sin intentar elaborar en ellos, ¿para quién surgieron? Además, ¿Qué importa cuántos pensamientos puedan surgir? La forma de apartar nuestra atención de estos pensamientos y recobrar nuestra autoatención (atención sobre el yo) es como sigue. En el momento en que cada pensamiento surge, si uno, con una actitud de vigilancia continua se pregunta ¿para quién surgió? la respuesta será “para mí”. Si entonces uno se pregunta ¿quién soy yo? la mente (nuestro poder de atención) regresará su atención desde ese pensamiento hacia su fuente de origen (el yo). Sin embargo, como no hay nadie allí para recibirla, el pensamiento que inicialmente había surgido, de esa misma manera se calmará. Si se practica esta técnica repetidamente, el poder de la mente de residir en su fuente de origen incrementará. La mente se calmará solo cuando uno investiga “¿quién soy yo?” Para hacer que la mente se calme, no existe otra manera adecuada sino la investigación (vichara). Si uno hace uso de otras técnicas para calmar la mente como, por ejemplo, el control de la respiración (pranayama), la meditación en alguna forma de Dios (murti dhyana), o la repetición de palabras sagradas (mantra-japa), la mente aparentará calmarse, pero se estimulará nuevamente. Mientras que en la mente exista atracción hacia objetos sensuales (vishaya vásanas), será necesaria la práctica de la investigación de ¿quién soy yo? A medida que nuestra autoatención (swarupa dhyana) se hace más y más intensa, todas esas tendencias serán eventualmente destruidas. Si uno recurre o se aferra a la práctica ininterrumpida del autorecuerdo (swarupa smaranai) hasta que se alcanza el yo, esa práctica será suficiente. Solo el pensar continuamente en “yo, yo”, nos llevará a esa fuente de origen. Mantener la mente (nuestro poder de atención) siempre fija en ese yo (en el sentimiento de “yo”) se conoce como autoinvestigación (atma vichara). El conocer nuestra real naturaleza (swarupa) a través de la investigación “¿quién soy yo quien experimenta ataduras? es liberación (mukti), dice Sri Bhagaván.
El pensamiento “yo” (aham vritti) que comenzó a escrutinar “¿qué es esta primera persona que siente ese yo? destruirá a todos los otros pensamientos y, al igual que el ultimo palo usado para revolver una pira funeraria (tipo de cremación practicado en la India y en otros lugares), ese pensamiento de “yo” también será consumido. Esto es, de la conciencia mezclada “yo soy tal y tal”, que es la raíz de todos los pensamientos, solo el sentimiento asociado “tal y tal” desaparecerá (pues su existencia es falsa) y solamente el yo, el conocimiento “yo soy”, que es la conciencia real de nuestra existencia, permanecerá brillando.
Este estado en el que brillamos por nuestra propia luz, libre del apego a la individualidad (jivapadhi), es exaltado en varias religiones usando diferentes nombres como Jivanmukti, Moksha, Parinirvana,la morada suprema (paramapadam), el reino de Dios, y otros más. Este estado de destrucción del ego, que es la forma de la conciencia individual (jiva bodha rupa) es en si el estado de inmortalidad. Veamos ahora cómo la aniquilación del ego también ocurre a través de la renunciación, también conocida como camino de la devoción (bhakti marga).
La renunciación. La renunciación debe ser entendida como un acto de entrega (o más específicamente, de devolución) de nuestro ego a Dios. En realidad, ¡la autoinvestigación y la renunciación, son la misma cosa, tanto en el resultado obtenido -la aniquilación del ego- como en la práctica empleada! El camino de la renunciación o la devoción está recomendado a aquellos que creen en Dios. Cuando este “yo” o alma individual y el mundo son realmente posesiones de Dios, pretender que este cuerpo soy yo o que es mío es cometer el gran pecado de robarle a Dios lo que le pertenece. Si este apego al cuerpo (dehabhimana) es devuelto a Dios, el estado de ausencia del ego habrá sido alcanzado. Este estado ausente de ese “yo” (ahankara) y ese “mío” (mamakara) es el estado del yo.
Aunque superficialmente pueda parecer que hay diferencia entre la práctica de la autoinvestigación y la de la renunciación, o sea, que un practicante de la autoinvestigación se enfoca en el yo mientras que el de la renunciación se enfoca en Dios, estará bien claro para aquel realmente dedicado a la práctica espiritual (sádhana) que ambas son la misma cosa, no solamente en el resultado (establecerse en el yo a través de la aniquilación del ego), sino también en su práctica. ¿Cómo? El devoto que haya comenzado la sádhana de su entrega a Dios, debe de allí en adelante abstenerse de apoderarse del cuerpo como si este fuera “yo” o fuera “mío”. Si continúa identificándose con el cuerpo, estará cometiendo el pecado de dattapaharam, esto es, de retomar lo que ya había sido entregado a Dios. Por lo tanto, el tratar de evitar caer en este pecado es la forma correcta de practicar la renunciación. Ahora, ¿cómo se puede hacer esto? Para evitar que la falsa primera persona -el sentimiento de que “yo soy en cuerpo”- surja de nuevo, ¿no se trataría de mantener una actitud vigilante fija sobre el surgimiento de esa primera persona? Entonces, ¡la misma autoatención practicada por un investigador (atma vichara) también estará presente en un verdadero devoto (bhakta)!
Para poder entregarse a Dios, es necesario, primero que todo, conocer el “yo” que va a ser entregado. Pues a menos que uno sepa quién es este llamado ‘yo”, ¿cómo se va a poder entregar? Si un soldado no sabe a lo que la palabra “arma” se refiere, cuando se le pida que entregue su arma entregará un lápiz. Esto es exactamente lo que ocurre en el caso de muchos aspirantes en el camino de la devoción. Aunque ellos saben que deben entregarse a Dios, no saben cómo hacerlo, pues no tienen un conocimiento claro de quiénes son y qué es exactamente lo que se debe entregar. Como no saben cuál “yo” es el que se debe entregar, solo pueden entregar cualquier cosa que consideren como “mío”. Esto es, como no conocen la naturaleza del yo, el poseedor, no pueden hacer más que entregar sus pertenencias. Por lo tanto, si su entrega ha de ser completa, deben tratar al menos, poco a poco, de investigar y averiguar quiénes son, pues solamente así podrán entregarse perfectamente. Como la naturaleza del ego -el “yo” individual que debe ser entregado- es tal que se calmará y desaparecerá cuando es observado (y encontrado no existente), la autoinvestigación realizada por un devoto serio resultará automáticamente en renunciación o autoentrega.
Entonces, ¡la autoinvestigación -indagación en la que la mente renuncia a seguir prestando atención a segundas y terceras personas y se enfoca solamente en su origen- resulta ser la forma correcta de renunciación! Permanecer habitando firmemente en el yo (atmanishhtha), sin dar lugar ni por un instante a que surja un pensamiento que no sea el yo (atma chintana), es entregarse a Dios, dice Sri Bhagaván en el libro “¿Quién Soy Yo?”. Inclusive el devoto que está buscando a Dios fuera de sí mismo está enfocando su atención en una segunda persona. Como Dios brilla como la realidad de la primera persona, enfocarse exclusivamente en la primera persona, es la forma correcta de brindarle atención a Dios y es el verdadero camino de la devoción.
We present here an excellent summary of Sri Ramana’s teachings by Sri Sadhu Om, a direct disciple of Sri Bhagavan and a close associate of Sri Muruganar, Bhagavan’s foremost disciple. We also present a video recording with Michael James in which he complements and elaborates on this summary. Michael had spent many years with Sri Sadhu Om and had thoroughly studied all the original works of Sri Ramana. In this video, Michael explains the logic as well as the technique of self-investigation, so devotees can get started on this direct path.
1. The Goal
Bhagavan Sri Ramana has shown that the goal of all humanity is only to obtain perfect happiness (paripurna sukham). There is no one who does not desire happiness. Through all their efforts, are not all living beings (jivas) seeking only for happiness? Therefore, there is no one who will not desire the goal shown by Sri Bhagavan. For this very reason, the teachings of Sri Ramana do not belong to any particular religion but instead shine as a common and open path which gives refuge to all living beings. That is why people of every country and every religion in the world accept the teachings of Sri Ramana and follow them with great love.
What is happiness? It is only because people do not know the correct answer to this question, that they put forth their efforts in so many different directions in order to obtain happiness. Happiness is truly nothing but self (atman). The very nature of self is happiness. We are in truth self itself; hence our nature is happiness itself. Yet, since people do not know that they are truly self and since they think themselves to be the body, they suffer unnecessarily, as if they had lost happiness. To regain our happiness which appears to be lost, it is sufficient if we know ourself – our true nature – which appears to be forgotten.
Some people ask, “Is it not selfishness if we try to obtain happiness for ourselves?” Because the correct meaning of the word ‘self’ is not known, this question rises even in the minds of good people. The word ‘self’ (swayam) means only self (atman). It is only because we do not know ourself to be the unlimited and undivided self and because we view ourself through the limited outlook ‘This body alone is I’, that the word ‘selfishness’ is understood by us to denote a base quality. But in the experience of an Atma-jnani, one who knows ‘I am truly the one self who shines equally in all living beings’, does not the word ‘selfishness’ or self-interest (swaya-nalam, literally self-benefit) denote the interest or benefit of all living beings? Only when self-knowledge (atma-jnana) dawns will the truth be known that self alone is the reality of all living beings. And only when we thus know ourself to be self, can we do real good to all the living beings in all the worlds. We cannot experience true love towards all beings in the world merely by vocally preaching, “Love thy neighbour as thy self”. It is only when we experience through self-knowledge that all beings are ‘I’, the first person singular, that we will attain otherless love (ananya priyam) towards all beings. Such self attainment (atma-siddhi) alone is the main root which enables peace, love and happiness to thrive in the world. Therefore self- investigation, the medicine which destroys the evil of ego, is the immediate and principal need of the world. Only the true Atman-jnani can do real good to the world! The mere existence of a Jnani, one who knows self, is sufficient to ensure the welfare of the whole world. Thus, is it not clear that if the whole world is to obtain happiness, the correct goal of all people should only be to know self?
Only through self-knowledge can people attain true and perfect happiness. It is wrong to ignore this fact and to try to achieve happiness by enjoying worldly objects through the five senses, because happiness does not come from those objects. Even when some iotas of pleasure are experienced from such objects, it is only because the mind is then dipping in self, its activities (vrittis) being momentarily lulled. Whenever the things that we like are obtained and whenever evil befalls the things that we dislike, the mind becomes introverted and, by thus dipping in self, experience the happiness of self alone. Because people do not know this truth, they wrongly think that happiness is obtained by them from worldly objects, and hence they work day and night seeking those objects, taking that to be the sole goal of their life. This indeed is ignorance, otherwise called maya.
The happiness acquired by seeking and amassing worldly objects and by enjoying them through the five senses is very trivial and transient, is it not? Hence, the goal shown to us by Sri Ramana Bhagavan is to avoid being one who thus enjoys only such trivial happiness and instead to become one who enjoys perfect happiness.
2. The Path
For attaining this goal, Sri Bhagavan has charted out two paths, namely (1) self-investigation (atma-vichara), that is , knowing oneself (one’s true nature) through the investigation ‘Who am I ?”, and (2) self-surrender (atma-samarpanam), that is, restoring oneself (the ego) completely to God. The former is the path of knowledge (jnana-marga) and the latter is the path of love or devotion (bhakti-marga).
Self-investigation: When we want to know a thing, we attend to that thing. Accordingly, if we want to know ourself, we should attend to ourself, the first person, the consciousness ‘I’.
However, are not all the researches that we see going on in the world concerned only with knowing the world and God, which are second and third person objects, instead of knowing oneself, the first person or subject? Man, the knowing entity who tries to know the world and God, does not yet correctly know who he himself is. We say ‘I am a man’. This is not a correct knowledge of ourself, but only ignorance. How? We feel ‘I am a man’ only because we wrongly think that we are the body, our possession. Knowing oneself through the investigation ‘Who am I, the possessor?’ and thereby distinguishing oneself from the body, is alone the true discriminative knowledge. The feeling ‘I am the body’, which is the ego or ahankara, is a false knowledge of oneself. To know oneself as the unlimited and undivided self (akhanda atman) alone is Atma-jnana or true self-knowledge.
When consciousness rises from sleep, we know ourself in the form ‘I am the body’. But in sleep there is no knowledge of the body and world. The pure consciousness ‘I am’ alone exists in sleep. In the waking state this self-consciousness rises mixed with an adjunct (upadhi) as ‘I am’ the body; I am a man; I am so-and-so’. This is the ego (ahankara), the sense of individuality (jiva-bodha); this is bondage; this is the first thought. Only to this first thought, the man, do other thoughts – the knowledge of second and third persons rise. The more one attends to second and third persons, the more the thoughts will go on increasing. Instead, one should attend to the form of the ego, the first person feeling ‘I am so-and-so’, in order to know ‘Who am I?’ or ‘What is the truth/true nature/exact nature of my existence?’
“If other thoughts (which are second and third persons) rise, one should, without attempting to complete them, enquire ‘To whom did they rise?’ What does it matter however many thought rise? The means to set aside thought-attention and to regain self-attention is as follows: At the very moment that each thought rises, if one vigilantly enquires ‘To whom did this rise?’ it will be known ‘To me’. If one then enquires ‘Who am I?’, the mind (our power of attention) will turn back from the thought to its source (self); then, since no one is there to attend to it, the thought which had risen will also subside. By repeatedly practising thus, the power of the mind to abide in its source increases. The mind will subside only by means of the investigation ‘Who am I?’ To make the mind subside, there is no adequate means other than investigation (vichara). If made to subside by other means such as breath-control (pranayama), meditation upon a form of God (murti-dhyana) or repetition of sacred words (mantra-japa), the mind will remain as if subsided, but will rise again. As long as there are tendencies towards sense-objects (vishaya-vasanas) in the mind, so long is the investigation ‘Who am I?’ necessary. When /As self-attention (swarupa-dhyana) becomes more and more intense, all those tendencies will be destroyed. If one resorts/clings to uninterrupted self-remembrance (swarupa-smaranai) until one attains self, that alone will be sufficient. Even if one goes on thinking ‘I, I’, it will lead to that source. Always keeping the mind (our power of attention) fixed in self (in the feeling ‘I’) alone is called ‘self-investigation’ (atma-vichara). Knowing one’s own real nature (swarupa) by investigation ‘Who am I who am in bondage?’ alone is liberation (mukti), thus says Sri Bhagavan.
The ‘I’-thought (aham-vritti) which started to scrutinize ‘What is this first person feeling I?’ will destroy all other thoughts and, like the stick used for stirring the funeral pyre, will itself finally be destroyed. That is, from the mixed consciousness ‘I am so-and-so’, which is the root of all thoughts, only the adjunct-feeling ‘so-and-so’ will slip away (since its existence is false), and self, the knowledge ‘I am’, which is the true consciousness of one’s existence, alone will remain shining.
This state in which we thus shine by our own light, freed from the adjunct of individuality (jivopadhi), is extolled in different religions by various names such as Jivanmukti, Moksha, Parinirvana, the supreme abode (paramapadam), the kingdom of god and so on. This state of the destruction of the ego, the form of the individual consciousness (jiva-bodha-rupa), is itself the state of immortality. Let us now see how this rooting out of the ego also takes place through self-surrender, the path of devotion (bhakti-marga).
Self-surrender: Self-surrender should be understood to mean surrendering (or to be more accurate, restoring) the ego to God. In truth, self-investigation and self-surrender are not two but one and the same, both in result- the annihilation of the ego- and in practice! The path of self-surrender or devotion is meant for those who believe in God. When this ‘I’ or individual soul and the world are truly the possessions of God, to claim the body as ‘I’ and ‘mine’ is the great sin of stealing what belongs to God. If this attachment to the body (dehabhimana) is surrendered to God, the state of egolessness will attained. This state devoid of ‘I’-ness (ahankara) and ‘mine’-ness (mamakarra) is the state of self.
Though on superficial observation it may appear as if there is a difference between the practice of self-investigation and that of self-surrender, namely that an aspirant practising self-investigation attends to self while a devotee practising self-surrender attends to God, it will be clear to one who truly engages in practice (sadhana) that both are one and the same, not only in their result – namely to be established in self through the destruction of the ego – but also in practice. How? A devotee who has begun the sadhana of surrendering himself to God should thereafter refrain from again seizing the body either as ‘I’ or as ‘mine’. If he again takes the body as ‘I’ or ‘mine’, he is committing the sin of dattapaharam, that is, taking back what has already been offered to God. Therefore, trying to avoid taking back what has been offered is the correct method of practising self-surrender. Now how does he do this? To prevent the false first person – the feeling ‘I am the body’- from rising again, does he not try to remain with a very vigilant attention fixed on the rising of that first person? Thus, the same self-attention which is going on in an enquirer (atma-vichara) is also going on in true devotee (bhakta)!
Moreover, if one wants to surrender oneself to God, it is first of all necessary for one to know the ‘self’ which is to be surrendered. For unless one knows who this so-called ‘self’ is, how is one to surrender it? If a soldier does not know what is meant by the word ‘gun’, when he is asked to surrender his gun he will surrender only his pen. This is exactly what happens in the case of many aspirants on the path of devotion. Though they know that they should surrender themselves to God, they do not know how to do so because they have no clear knowledge as to who they are and what exactly they are to surrender. Since they do not know what the ‘I’ is which is to be surrendered, they are only able to surrender whatever they take as ‘mine’. That is, since they do not know the nature of themself, the possessor, they can do nothing more than surrender their possessions. Therefore, if their surrender is to become complete, they must try at least little by little to enquire and find out who they are, for then only will they be able to surrender themselves perfectly. Since the nature of the ego – the individual ‘self’ which is to be surrendered – is such that it will subside and disappear when it is attended to (being found to be truly non-existent), the self-investigation done by an earnest devotee will automatically result in self-surrender.
Thus self-investigation – in which the mind gives up attending to second and third persons and attends instead to its own source – itself turns out to be the correct self-surrender! ‘Remaining firmly in self-abidance (atmanishtha), without giving even the least room to the rising of any thought other than the thought of self (atma-chintana), is surrendering oneself to God’, says Sri Bhagavan in Who am I?. Even a devotee’s seeking God outside himself is only a second person attention. Since God shines as the reality of the first person, attending to the first person alone is the correct God-attention and the true path of devotion!
Video recording with Michael James: